திருச்சி மாவட்ட திராவிடர் கழக மேனாள் இளைஞர் அணி தலைவரும், திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் அவர்களின் மைத்துனருமான கொள்கை வீரர் மானமிகு சு. இளங்கோவன் (வயது65) இன்று (25.8.2024) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
அவருடைய தந்தையார் மறைந்த ஆசிரியர் சுந்தரேசன் கீழ்வேளூரில் பணியாற்றி, தந்தை பெரியாரின் தன்மானப் பேரவையில் சீரிய முறையில் தொண்டாற்றியவர் ஆவார்.
அந்தக் குடும்பமே தந்தை பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி வாழும் குடும்பமாகும்.
அவர் பிரிவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்வினணயர் எலிசபத், அவரது மைத்துனர் திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் மற்றும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
25.8.2024
திராவிடர் கழகம்
குறிப்பு: இறுதி நிகழ்ச்சி நாளை (26.8.2024) காலை
11 மணிக்கு நடைபெறும்.