இப்போது எல்லாம் ரயிலில் 3 மாதம் முன்பே பயணச் சீட்டை முன்பதிவு செய்து ஏறினாலும், வேறு யாராவது உட்கார்ந்து கொண்டு இடம் தர மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ரயில் பயணிகள் யாரிடம் புகார் அளிப்பது, எப்படி பிரச்சினையை கையாள்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். ஒருவேளை ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை யாராவது உட்கார்ந்துகொண்டு இருக்கையை விட மறுத்தால் இதை செய்யுங்கள்.
முன்பு ரயிலில் பொதுப்பெட்டி பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏறினால் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல் சர்வசாதாரணமாக பொதுப்பெட்டி பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏற மாட்டார்கள். ஆனால் இப்போது அபபடி இல்லை.. சர்வ சாதாரணமாக முன்பதிவு செய்த பெட்டியில் பொதுப் பெட்டியில் பயணம் செய்யும் (அன்ரிசர்வ்டு) பயணிகள் ஏறுகிறார்கள். அத்துடன் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, இருக்கையை விடவும் மறுக்கிறார்கள்.
அப்படி ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை யாராவது உட்கார்ந்துகொண்டு உங்களுக்கு இருக்கையை விட மறுத்தால் நீங்கள் உடனடியாக உங்கள் அலைபேசியில் 139 என்ற ரயில்வே உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அதேநேரம் அலைபேசியில் SEAT என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு சீட் நம்பரை டைப் செய்யுங்கள், அடுத்ததாக PNR என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு பிஎன்ஆர் நம்பரை டைப்செய்யுங்கள். முடிவில் OCCUPIED BY ANOTHER PASS என்று டைப் செய்த 139 என்ற எண்ணிற்கு எஸ்எம் எஸ் அனுப்புங்கள். அப்படி அனுப்பினால், 10 நிமிடத்தில் டிடிஆர் வந்து அவரை துரத்திவிடுவார்..