பள்ளிகளில்…
சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரூ.6.50 கோடியில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆட்சி மொழி
ஆட்சி மொழித் திட்டம் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்துக்கு சுழற்கோப்பையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பேரவைசெயலாளர் ஜி.சீனிவாசனிடம் வழங்கினார்.
மனநலம்
மனநல பாதிப்பு பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தேசிய சுகாதார திட்டத்தின் தமிழ்நாடு இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வலியுறுத்தியுள்ளார்.
உறுதி செய்ய
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிவதை ஒப்பந்த தாரர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் அறிவுறுத்தி உள்ளார்.
தொடக்கம்
தமிழ்நாட்டில் 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 30 வயது வரையுள்ள பெண்கள் என மொத்தம் 2.70 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை
மருத்துவக் கல்லூரிகளில் குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கல்லூரிகளின் டீன்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி அறிவுறுத்தியுள்ளார்.
பேச்சு வார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 65ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு தொழிற் சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காற்றாலைகளில்…
புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் 1,000 மெகா வாட், காற்றாலையின் உற்பத்தியில் 200 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலீடாக…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்துக்காக (இஸ்ரோ) ஒன்றிய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது என்று அதன் தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment