தமிழ்நாட்டில் குழாய் மூலம் வீட்டிற்கே சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம் கொண்டு வரப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
அதிகாரிகள் கடைசி கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
உங்கள் வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புகளைப் பெற முடியும் என்று சொன்னால்.. வியப்பாக இருக்கிறது அல்லவா..
சென்னையில் அது வெகுவிரைவில் நிஜமாக போகிறது. சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான பதிவுகள் தொடங்கி உள்ளது. இதுவரை 30000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா ₹ 576 செலுத்தி PNGக்கு பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இது விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள வீடுகளுக்கு PNG அல்லது பைபர் இயற்கை எரிவாயு எனப்படும் குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இனி குழாய் மூலமாக சமையல் எரிவாயு!
Leave a comment