மதுரை,ஆக.9 – மதுரை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் சிறுவர் கள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உருவாகுவதை தடுத்தல் மற்றும் அனைத்து பள்ளி வயது சிறுவர்களும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி செல்வதை உறுதி செய்வது மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச் சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுரைப்படி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெய பாலன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் வழிகாட்டுதலின் படி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 2022-_2023 கல்வியாண்டில் குழந்தை தொழி லாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 1986ஆம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்(தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத் தின் கீழ் 14 வயது நிரம்பாத சிறு வர்களை அனைத்து விதமான பணிகளிலும், 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தினரை அபாய கரமான தொழில்களில் ஈடுபடுத்து வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுபவர் களுக்கு நீதிமன்றம் மூலம் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரையி லான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
அத்துடன், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் களை சட்டத்துக்கு புறம்பாக வேலைக்கு அனுப்பும் பெற்றோ ருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை வேலை யில் ஈடுபடுத்துவது தெரிந்தால் 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.