கோயில் விழாவா? கொலை விழாவா?

2 Min Read

திருநெல்வேலி, ஆக. 19- திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் கோவில் திருவிழாவில் அண்ணன் – தம்பி கொடூர மாக குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்குத் தொடர்பாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை கக்கன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கள் மகேஷ்வரன் (43), மதியழகன் (40), மதி ராஜா (38). இவர்கள் அனைவருக்கும் திருமண மாகி விட்ட நிலையில், மூத்த மகன் மகேஷ்வரன் உடன்குடி அனல் மின் நிலையத்திலும், மற்ற 2 பேரும் ஓட்டுநர்களாகவும் பணியாற்றி வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மனைவி முருகேஷ் வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார் (26), பெவின் குமார் (24), வருண் குமார் (22), அஜித்குமார் (23), சபரி வினோத் (18) ஆகிய 5 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், 16.8.2024 அன்று இரவு கக்கன்நகர் அருகே ஓடக்கரை சுடலைமாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் மேற்கண்ட இருதரப்பு குடும்பத்தினரும் கலந்து கொண்ட நிலையில், நள்ளிரவில் கோவில் பூஜைக்காக கோவில் முன் நடைபெற்று வந்த கரகாட்டம் நிறுத்தப் பட்டது.

கரகாட்டம் நிறுத்தப் பட்டது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பெவின்குமார், வருண் குமார், அஜித்குமார், சபரி வினோத், முருகேஷ்வரி, ராஜ்குமாரின் மனைவி திவ்யா (24) ஆகியோர் கோவில் கொடை விழாவுக்கு ஆடுகளை பலியிடுவதற்காக கொண்டு வந்த கத்திகளால் மதி யழகன், மதிராஜா ஆகிய அண்ணன் தம்பி இரு வரையும் சரமாரியாக குத்தியதாகவும், மகேஷ் வரனை கத்தியால் வெட்டி யதாகவும் கூறப்படுகிறது.
கோவில் கொடை விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் திடீரென ஒரு கும்பல் சகோதரர்களைக் கத்தியால் வெட்டுவதைப் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ராஜ்குமார் உள்பட 7 பேரும் அங் கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
கத்திக்குத்தில் மதிய ழகன், மதிராஜா ஆகியோர் நிகழ்வு இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக பலியானார்கள். மகேஷ் வரன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.
இந்த இரட்டைக் கொலை குறித்து உடனடியாக திசையன் விளை காவல் துறையி னருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுந்தரவதனம், வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த மகேஷ்வரனை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங் கோட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப் பட்ட 2 பேரின் உடல்களும் உடற்கூராய்விற்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *