நாகப்பட்டினம், ஆக10 நாகை மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து வேளாங்கண்ணியில் ஆர்ப்பாட்டம் நடந் தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கினார். கீழையூர் ஒன்றிய செயலாளர் பயஸ் வில்சன், மாவட்ட துணை செயலாளர் சார்லஸ், ஒருங்கிணைப்பாளர் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இப்ராஹிம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் அருள்செல்வன், மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த சந்தனமேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.