‘காங்கிரஸ் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.’ செல்வப்பெருந்தகை சாடல்!

1 Min Read

சென்னை, ஆக.18 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை ராயப் பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் 15.8.2024 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது, “இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இன்றைய தலைமுறை, இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது, பிரிட்டிஷ்காரர்களை ஆயுதம் இன்றி காந்தியாரும், நேருவும், முக்கிய தலைவர்களும் எப்படி விரட்டினார்கள் என நினைவு கூர வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுயிரைக் கொடுத்தவர்கள். இந்த தலைமுறை சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எப்படிப்பட்ட தியாகங்களைச் செய்து இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நேரு மற்றும் காமராஜரை எல்லாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
ஆனால், இன்று சுதந்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலர் உரிமை கொண்டாடுகிறார்கள். இதையெல்லாம் இந்த தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபோது குண்டூசி தயாரிக்க கூட வாய்ப்பு இல்லை. ஆனால், அதன் பிறகு உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் இந்தியா செயல்பட்டது.
பசி பட்டினியால் இந்தியா அழிந்து போகும் என்று நினைத்தார்கள். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் உலகமே திரும்பி பார்க்கக் கூடிய வகையில், அவர்கள் காலகட்டத்தில் மிகப்பெரிய சிறப்பு பணிகளை செய்தார்கள்.
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திர நாள் விழா கொண்டாடப் பட்டது. போலி சித்தாந்தம் என் பது பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் வைத்திருக்கிற சித்தாந்தம். பாஜக வுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன சித்தாந்தம் இருக்கிறது? முதலில் நாம் அனைவரும் இந்த தேசத்தின் மக்கள் என்று சொல்ல முடியுமா? சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ். ஆனால், ஆர்எஸ்எஸ், சங்பரிவார், பாஜகவினர் இன்று சொந்தம் கொண்டாட துடிக்கின்றனர்” என கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *