தருமபுரி, ஆக.18 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியில் இருந்து 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 21,500 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 21,500 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.