பெங்களுரு, ஆக. 10 கருநாடகா ஷிவமொக்காவில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரய்யா கலை கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட தனியார் நிகழ்ச்சியில் திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டார். திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் பாஜவிற்கு எதிரானவர் என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்பவர். பாஜவின் மதச்சார்பு அரசியலையும், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசையும் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார். பிரகாஷ் ராஜ் பாஜவிற்கு எதிரானவர் என்பதால், அதை எதிர்க்கும் விதமாக, கல்லூரி வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கல்லூரியை சேர்ந்த பாஜ மாணவர் அமைப்பு கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
பாஜவினரும் அந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் அந்தக் கல் லூரியை விட்டு கிளம்பிய பின் னர், அந்த நிகழ்ச்சி நடை பெற்ற அரங்குக்குள் வந்த பாஜக மாணவர் அமைப்பினர், அந்த அரங்கம் முழுவதையும் மாட்டு மூத்திரத்தை (கோமி யத்தை) ஊற்றி சுத்தம் செய்துள் ளனர். இதுகுறித்த காட்சிப் பதிவுகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேபோல், 2018இல் பிர காஷ் ராஜ் ராகவேந்திரா மடத் திற்கு சென்றபோது, அவர் நின்ற அரங் கத்தை மாட்டு மூத்திரத்தால் சுத்தப் படுத்திய நிகழ்வு நடந்ததும் குறிப் பிடத்தக்கது.