வடசென்னை மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளரும், பெரியார் டிஜிட்டல் ஆர்ச்சிவ்ஸ் பொறுப்பாளருமான த.மரகதமணி அவர்கள் தன் இளமைப் பருவம் முதல் சேர்த்து வைத்திருந்த 136 நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து உதவினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நூலகத்திற்கு நூல்களை வழங்கியமைக்கு நூலகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி!
– நூலகர்,
பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்