முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2024) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதுடன், 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்.