சமூக வலைதளங்களில் தவறான காட்சிப் பதிவுகள் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

2 Min Read

சென்னை, ஆக.14- மாணவர்களின் அடை யாளங்களை மறைக்காமல் சமூக வலைதளங்களில் (வீடியோக்கள்) காட்சிப் பதிவுகள் பரப்புவது சட்டப்படி குற்றம் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து மக்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ப தற்காக நிதி உதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் தோறும் கலைஞர் உரிமைத் தொகை மூலம் ரூ.1,000-ம், அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு, கல்லூரி படிப்பின்போது மாதம் ரூ.1,000-ம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் தவப்புதல்வன் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டங்களால் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால் இந்த திட்டங்களால் மக்க ளுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் கேள்விகுறியாகி விட்டது. இந்த நிதி உதவியால் மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.

இதுபோன்ற உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியதிலிருந்தே டாஸ்மாக் வருமானம்தான் அதிகரித்துள்ளது. அரசின் பணம், அரசுக்கு தான் செல்கிறது என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு வலுசேர்க்கும் வகையில் சிலர் பெண்கள் மற்றும் மாணவர்கள் மதுகுடிக்கும் காட்சிப்பதி வுகளைப் பரவ விடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சமூகவலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை வெட்ட வெளிச்சமாக்க வாட்ஸ்- அப்பில் TNFACT CHECK என்ற ஒரு சேனலை தொடங்கி உள்ளது. அதில் தவறான தகவல்கள் குறித்து அதற்கு அரசின் விளக்கமும் பதிவிடப்படுகிறது. அந்த வகையில் பேருந்தில் போட்டிபோட்டு கொண்டு பீர் குடிக்கும் மாணவிகள், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மூலம் மீண்டும் வாங்கும் அரசு என்று ஒரு காட்சிப்பதிவுடன் சமூகவலைத்தளத்தில் பரவிய பதிவுகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை பதிவு வெளி யிட்டுள்ளது.

சட்டப்படி குற்றம்
அதில் கூறியிருப்பதாவது:-
இந்தக் காட்சிப்பதிவு கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே எடுக்கப்பட் டது. ஆனால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டம் கல்லூரி மாணவிகளுக்கானது. பள்ளி மாணவிகளுக்கு அல்ல. மேலும் இந்தக் காட்சிப்பதிவு வெளியான போதே, பள்ளிக்கல்வித் துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் தரப்பில் மாணவிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவர்களின் அடையாளங்களை மறைக்காமல் பழைய காட்சிப்பதிவை சமூகவலைதளங்களில் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *