தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் – முதலமைச்சருக்குக் கோரிக்கை!
கந்தர்வகோட்டை, ஆக.14 ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மாபெரும் புரட்சியாக… மாற்றுத்திறனாளி, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் வழிகாட்டுதலின்படி மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களில் மாற்றுத்திறனாளியாக பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசும் கடந்த ஆண்டு குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வர லாற்றுச் சாதனையை தி.மு.க. அரசு தொடர்ந்து படைத்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில், பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தி திராவிட மாடல் அரசில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரிய பெருமக்கள் பதவி உயர்வு பெற்று வாழ்வில் முன்னேற ஏற்பாடு செய்து தருமாறு முதலமைச்சர் அவர்களை மாற்றுத்திறனாளிகள் சார்பில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
கலைஞரின் பொற்கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் 2006 முதல் 2011 எண்ணற்ற திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தி மாற்றுத்திறனாளிகளின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் மாபெ ரும் புரட்சியாக பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவார் முதலமைச்சர் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறோம்.
மாற்றுத்திறனாளி, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிடுமாறு மாற்றுத்திறனாளிகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.