தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக் கழகத் தலைவராக எஸ்.கே.பிரபாகர் அய்.ஏ.எஸ்.
தமிழ்நாடு அரசு பணி யாளர்கள் தேர்வாணையத் தலைவராக மூத்தஅய்.ஏ.எஸ். அதிகாரியான
திரு.எஸ்.கே.பிரபாகர் அவர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க நியமனம் ஆகும்!
நேர்மையும், திறமையும் வாய்ந்தவரான இவர், பல்வேறு பொறுப்புகளிலிருந்து அனுபவம் பெற்ற வர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். பொறி யாளராகி, பிறகு அய்.ஏ.எஸ். படித்து, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறை படிப்பும் பெற்ற சாதனையாளர். 2019 இல் கூடுதல் தலைமைச் செயலாளர் தகுதி பெற்றவர்.
சமூகநீதி கண்ணோட்டத்தோடு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் பொறுப்பிலும் அவர் முத்திரை பதிப்பார் – அவருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தக்காரை அடையாளம் கண்டு நியமனம் செய்த முதலமைச்சருக்கும் நமது பாராட்டு கலந்த நன்றி!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14.8.2024