1) பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்.
(INTERNATIONAL LEFT HANDERS DAY)
(உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று அய்.நா.அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும் சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பன்னாட்டு இடது கைப்பழக்கம் உடையோர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளை முதன் முதலில் 1976ஆம் ஆண்டு பன்னாட்டு இடதுகை அமைப்பு அறிவித்தது).
2) பன்னாட்டு உடல் உறுப்பு ெகாடை நாள்
(ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு உடல் உறுப்பு கொடை நாள் ஆகஸ்ட் 13 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது. உடல் உறுப்பு கொடையின் உன்னதத்தை சிறப்பிக்கும் வகையிலும், உடல் உறுப்பு கொடை செய்திட ஊக்குவிக்கும் வகையிலும் இந்நாள் கடைப் பிடிக்கப்படுகிறது)
3) 13-08-1826 – இதயத்துடிப்பு மானியைக் (stetho scope) கண்டுபிடித்த ரெனே லென்னக் அவர்களின் நினைவு நாள்.
4) 13-08-1888 – தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் லோகி பைர்டு அவர்களின் பிறந்த நாள்.
5) 13-08-1889 – நாணயங்கள் மூலம் தொலை பேசிகளைக் கட்டுப்படுத்தும் கருவி வில்லியம் கிரே என்பவரால் அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.
6) 13-08-1898 – 433 ஈரோசு என்ற முதலாவது புவியருகு சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.
7) 13-08-1910 – உலகின் முதல் செவிலியர் புளோரென்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் நினைவு நாள்.
8) 13-08-1913 – அறிவியலாளர் ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்த நாள்.
9) 13-08-1917 – நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்த எடுவர்டு பூக்னர் அவர்களின் நினைவு நாள்.
10) 13-08-1926 – கியூபாவின் புரட்சியாளரும், மேனாள் அதிபரும், பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவருமான தோழர் பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz) அவர்களின் பிறந்த நாள்.
[ கியூபாவில் 1959-ஆம் ஆண்டு தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற இவர் 1959-ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராகவும், 1976-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அதிபராகவும் பொறுப்பு வகித்தார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட பிடல்காஸ்ட்ரோ உலகத்திலேயே நீண்டகாலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் ஆவார்]
11) 13-08-1960 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்த நாள்.
12) 13-08-1972 – கடலூரில் தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற்ற நாள். (விழாக் குழுவின் சார்பில் தந்தை பெரியாருக்கு ரூபாய் பத்தாயிரம் கொண்ட பணமுடிப்பு வழங்கப்பட்டது).
13) 13-08-2004 – 28 ஆவது ஒலிம்பிக் விளையாட் டுக்கள் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமான நாள்.
14) 13-08-2014 – உச்சநீதிமன்றத்தில் முதல்தமிழ் பெண் நீதிபதியாக பானுமதி அவர்கள் பதவியேற்ற நாள்.