உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் ஒன்றிய பாசிச பிஜேபி அரசு

3 Min Read

தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் தலைமை நீதிபதி நீக்கம் : தலைவர்கள் கண்டனம்

புதுடில்லி, ஆக.12  உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்புக்கு எதிராக தலைமை நீதிபதி இல்லாமல் தலைமைத் தேர் தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் புதிய மசோதாவை ஒன்றிய அரசு நாடாளு மன்றத்தில் 10.8.2023 அன்று தாக்கல் செய்தது. 

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப் பட்டு வந்தனர். ஆனால், உச்ச நீதி மன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலை மையிலான அரசியல் சாசன அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுவின் பரிந்துரையின்படி குடியரசுத் தலை வர் நியமிக்கப்பட வேண்டும். நாடா ளுமன்றத்தில் இந்த நியமனங்கள் தொடர்பான சட்டம் கொண்டு வரப்படும் வரை இம்முறையே தொடர வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. 

இது தொடர்பான புதிய மசோதா நேற்று மாநிலங்களைவையில் அறி முகப்படுத்தப்பட்டது. அதன்படி பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய கேபினட் அமைச்சர் ஆகிய மூவரை கொண்ட குழு அமைக்கப் படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழுவின் பரிந்துரையின்படி தலைமை தேர்தல் ஆணை யர் மற்றும் இதர தேர்தல் ஆணையர் களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார் என்று குறிப்பிடப்பட்டிருந் தது. இந்த புதிய மசோதா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாக கூறி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தன.

காங்கிரஸ்

அரசியல்

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் தனது டிவிட்டர் பதிவில், ‘’புதிய மசோதா, தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப் பாவையாக்கும் அப்பட்டமான முயற்சியாகும். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உருவாக்கிய குழு உள்ள போது புதிய குழு எதற்கு? பிரதமர் ஏன் தனக்கு சாதகமான தேர்தல் ஆணையரை நியமிக்க நினைக்கிறார்? இது அரசமைப்புக்கு எதிரானது, தன்னிச்சையானது மற்றும் நியாயமற்ற மசோதா. காங் கிரஸ் இதனை வன்மையாக கண்டிக் கிறது,’’ என்று கூறியுள்ளார். 

ஆம் ஆத்மி

அரசியல்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது டிவிட்டர் பதிவில், “பிரதமர் தனது தலைமையில் குழு அமைப்பதன் மூலம் தான் விரும்பியவரை தேர்தல் ஆணை யராக்க முடியும். பிரதமர் மோடி அடுத்தடுத்து எடுக்கும் ஒவ் வொரு முடிவும் இந்திய ஜனநாயகத்தை பலவீனமாக்கி வருகிறது,” என்று தெரிவித்தார். 

திரிணாமுல் காங்கிரஸ்

அரசியல்

திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, “தலைமை நீதிபதிக்கு பதிலாக தனக்கு கீழ் உள்ள அமைச்சரை நியமிப்பதன் மூலம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஏற்படுத்தி உள்ள பயத்தில், தேர்தலில் வெளிப்படையாக மோசடி செய்து வெற்றி பெறுவதற் கான பாஜ.வின் அடுத்த கட்ட நடவடிக்கை யாகும்,’’ என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள் ளார். 

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண் டேவின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதியுடன் முடி வடைகிறது. அதற்குள் அடுத்தாண்டு நடை பெறும் மக்களவைத் தேர் தலுக்கான தேதிகள் அறிவிக்கப் படுவதற்கு சில நாட்கள் உள்ள நிலையில் அவர் பதவிகாலம் முடி வடைய உள்ளது. எனவே தான் தேர்வு குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும் மசோ தாவை தாக்கல் செய்து நிறை வேற்றுவதில் ஆளும் ஒன்றிய அரசு அதிக அக்கறை, அவசரம் காட் டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக் கின்றனர். தேர்தல் ஆணை யத்தை பிரதமரின் கைப்பாவையாக்கும் அப்பட்டமான முயற்சி. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாக அரசி யல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *