காரைக்குடி, ஆக.10 காரைக்குடி (கழக) மாவட்டம், காளையார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி சூசையப்பர்பட்டணம், சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (09.08.2024) பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறி வாளர் கழக மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன் கலந்து கொண்ட அனை வரையும் வரவேற்றார்.
அரசு மாவட்டக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவு ரையாளர் சூசை ஆரோக்கிய மலர் பெண் கல்வியின் அவசியம் குறித்தும், தடைகளைத் தாண்டி எவ்வாறு வெற்றிபெறுவது என்பது குறித்தும் தொடக்க உரை நிகழ்த்தினார்.
சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை சகோ. ஜோசப் கமலாராணி தனது வாழ்த்துரையில் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நமது இலக்கை முடிவு செய்து அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அதற்கு இது போன்ற வழிகாட்டி நிகழ்ச்சி கள் உதவியாக இருக்குமென்றும் கூறி மாணவிகளை நெறிப்படுத்தினார்.
இன்றைய பயிற்சி வகுப்பானது அறி வியல் துறைசார்ந்த படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள், வணிகத்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் என இரு பிரிவாக நடைபெற்றது.
கருத்தாளர் பேராசிரியர் திருக்கோஷ்டியூர் கே. மணிகண்டன், மனிதவள மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் மதுரை, ‘‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்’’ என்ற தலைப்பில் மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் அறிவியல் துறை சார்ந்த Artificial Intelligence, Big Data, Data Science, Block Chain, ChartGPY, Digital Marketing போன்ற படிப்புகள் குறித்தும், அரசு மற்றும் தனியார் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கியதோடு, இந்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளான JEE, NEET, NATA போன்ற தேர்வுகள் குறித்தும் அதற்கு மாணவிகள் எவ்வாறு தயாராவது என்றும் தெளிவுபடுத்தினார். மேலும் இன்றைய சூழலில் தொழில்நுட்பத்தின் முக்கியதும் குறித்து விவரித்ததோடு அதனை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் விளக்கினார்.
அதேபோல் கருத்தாளர் பி.ஏ.பாலன், தலைமை மற்றும் மேலாண்மை இயக்கு நர், பத்மராஜம் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், மதுரை அவர்கள் ‘‘வணிகவியல் மற்றும் மேலாண்மையில்’’ என்ற தலைப்பில் வணிகவியல் துறை சார்ந்த படிப்புகளான CA, CMA, ACCA மற்றும் இன்னும் பிற படிப்புகள் குறித்து விளக்கியதோடு வணிகம், உலகமயமாதல், பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அதனால் அத்துறைகளில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
மாணவிகளோடு கலந்துரையாடி கேள்விகளும் கேட்கப்பட்டது. சரியான விடைகளை கூறிய மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மாணவிகள் சற்றும் சோர்வடையாமல் உற்சாகத்தோடு பங்கேற்றதோடு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டனர்.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் காளையார்கோவில் ரோட்டரி க்ளப் ஆப் சுப்ரீம் மேனாள் தலைவர் ஜேம்ஸ், மாவட்டச் செயலாளர் அந்தோணிச்சாமி, காளையார்கோவில் ஒன்றிய அமைப்பாளர் அன்புக்கரசு மற்றும் தோழர் அரவிந்த், சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரி யர்கள், 11, 12 ஆம் வகுப்பு பயிலும் 893 மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு அழைப்பாளர்களுக்கும் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
இறுதியாக தேவகோட்டை பகுத்தறி வாளர் கழக நகர அமைப்பாளர்
சிவ. தில்லைராசா நன்றி கூறினார்.