குடும்ப அட்டையுடன் ‘ஆதார்’ இணைக்க பயனாளிகளுக்கு கடைசி வாய்ப்பு

2 Min Read

சென்னை, ஆக.9 குடும்ப அட்டையில் ஆதார் கார்டை இணைக்காத பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே ஒன்றிய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசுகள் தரப்பி லிருந்தும் உணவுப் பங்கீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைகள் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவுப் பொருட்களை வாங்கலாம். அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் குடும்ப அட்டைகள் வைத்திருப்போக்குக் கிடைக்கிறது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஒரு முக்கியமான வேலையை கட்டாயம் முடிக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து உணவுப் பங்கீடு உதவிகள் பெற முடியும். அதாவது, பயனாளிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டை குடும்ப அட் டைகள் இணைக்க வேண்டும். இதற்கு பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலை யில் இன்னும் பலர் தங்கள் குடும்ப அட்டைகள் ஆதாரை இணைக்காமல் இருக்கின்றனர். அது பிரச்சினையில் முடியலாம்.
குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உங்களிடம் குடும்ப அட்டைகள் இருந்தால் அது தொடர்பான விதிமுறைகளில் அரசு செய்துள்ள மாற்றம் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண் டும். இந்த விதிமுறைகளை நீங்கள் புறக்கணித்தால் அது பெரிய பிரச்சி னையாக மாறலாம்.

நீங்கள் முடிக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலை பாக்கி இருக்கிறது.

குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் நிறையப் பேர் தகுதியில்லாமல் விதிமுறைகளை மீறி இலவச உணவுப் பங்கீடுத் திட்டத்தை பயன்படுத்தி வருவது அரசின் கவனத் துக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், இத்திட்டத்தின் தகுதியுள்ள பல அட்டை தாரர்கள் அதன் பலனைப் பெறமுடியாமல் போகிறது. சொல்லப்போனால் நிறையப் பேர் புதிதாக குடும்ப அட்டைகள் வாங்குவதே சிரம்மாக இருக்கிறது. இதற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

தகுதியில்லாதவர்கள் குடும்ப அட்டைகளை உடனடியாக ஒப்ப டைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியில்லாதவர்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்காவிட்டால் விசாரணைக்கு பின் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தகுதியில்லாத வர்களின் பெயர்கள் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *