ஜாதிய வன்மத்தால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆட்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் சின்னதுரையை தமிழர் தலைவர் கட்டளைப்படி மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்டத் தலைவர் ச.இரா சேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், ப.க. செயற்குழு உறுப்பினர் ச.சங்கரராசு, பாளை பகுதி செயலாளர் ப.பாலகிருஷ்ணன், மருத்துவர் இராசாராம், ஒன்றியத் தலைவர் காருக்குறிச்சி சோ.சேகர், மாவட்ட காப்பாளர் இரா.காசி, குமார் (அமெரிக்கா), ஆவடி தமிழ்மணி, தஞ்சைப் பகுதி தலைவர் இரா.கருணாநிதி, ஆகாஷ், சிறீநாத், பகுதி செயலளர் மகேஷ் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாணவர் சின்ன துரையின் தாயார் அம்பிகாவுக்கு தொலை பேசியில் ஆறுதல் கூறினார். ஆசிரியர் அறிக்கை கொடுக்கப்பட்டது. (13.8.2023)
நாங்குநேரி : பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாயாரிடம் கழகத் தலைவர் தொலைபேசியில் ஆறுதல்
Leave a Comment