பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் – நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்
மேனாள் மாணவர்கள் சந்திப்பில் வேந்தர் டாக்டர் கி. வீரமணி
விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தஞ்சை மக்களவை உறுப்பினர் ச.முரசொலி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
வல்லம், ஆக.6 பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல் கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மேனாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர்
த.கவிதா (தலைவர், மேனாள் மாண வர்கள் சங்கம்) வரவேற்புரையாற்றும் போது மேனாள் மாணவர்கள் தங் களுடைய அனுபவத்தை எடுத்துக் கூறும்படியும், இப்பொழுது வளர்ந் துள்ள தங்களுடைய நிலையை யும் எடுத்துக் கூறும் படியும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழ கத்தின் (நிகர்நிலை) துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வெ.இராமச் சந்திரன் வாழ்த்துரையாற்றும் போது ‘‘இங்கு கூடியிருக்கும் மேனாள் மாணவர்களாகிய நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு (நிகர்நிலை) கல்வி வளர்ச்சிக்காகவும், அறக் கட்டளைகள் நிறுவியும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். ‘‘பல்துறைகளில் பணியாற்றும் மேனாள் மாணவர்களாகிய நீங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் முன்னோடிகளாக விளங்கி கொண்டிருக்கும் நீங்கள் நமது பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலை) இணைந்து செயலாற்ற வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டார்.
பல்கலைக்கழக (நிகர்நிலை) பதிவாளர் பேரா. முனைவர்
பி.கே.சிறீவித்யா வாழ்த்துரையாற்றும் போது ‘‘மேனாள் மாணவர்களின் பங்கு இப் பல்கலைக்கழகத்திற்கு தேவைப் படுகின்றது. ஆகையால் ஒவ்வொரு மேனாள் மாணவர்களாகிய நீங்கள் தங்களுடைய அனுபவங்களை மாண வர்களிடம் பகிரவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
மேனாள் மாணவர்கள் உரையாற்றும் போது ‘‘இப்பல்கலைக்கழகம் (நிகர் நிலை) எங்களுக்கு தன்னம்பிக்கை, தனித் திறமை, ஆற்றல், நல்ல கல்வி கற்றலை வழங்கியதால் நாங்கள் முன்னேற வழி வகுத்தது’’ என்றனர்.
பல்கலைக்கழக (நிகர்நிலை) வேந்தர் டாக்டர் கி சூர்யபிரபா அவர்கள் உரையாற்றும் போது ‘‘கல்லூரியாக தொடங்கி இன்றைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக (நிகர்நிலை) வளர்ந்துள்ளது மகிழ்ச் சிக்குரியதாகும். மேனாள் மாணவர் பங்கு கொண்ட ‘‘மீண்டும் சந்திப்போம்’’ என்ற நிகழ்ச்சியில் உங்களது கருத்துகளையெல்லாம் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஒரு காலத்தில் பெண்களெல்லாம் பேசக்கூடாது என்று இருந்த காலத்தில் இன்று வாழ்நாள் பூராவும் பெண்கள் பேசும் குரல்! அந்தக் குரலாக தந்தை பெரியார் உள்ளார். பெண்களுக்காக அன்று துவக்கிய பெரியார் மணியம்மை மகளிர் பொறியற் கல்லூரி பெரியார் மணியம்மை அறக்கட்டளை மூலம் துவங்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு உண்மையான அழகு எதில் என்றால் ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு’ என்று பெரியார் சொன்னதில்தான் அழகு உண்டு. செல்வங்களாகிய நீங்கள் செழித்த பயிராய் மட்டும் இல்லாமல் நல்ல விதையாகவும் உள்ளீர்கள். அதற்கு உங்களிடமுள்ள கட்டுப்பாடு தான் உங்களை உயர்த்தியுள்ளது.இந்த நிறுவனம் தான் எங்களுக்கு முதுகெலும்பு என்ற தன்மான உணர்வை உண்டாக்கியுள்ளீர்கள். உலகத்தில் உள்ள எந்த மூலைக்குச் சென்றாலும் நமது கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
மேனாள் மாணவர்கள் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடையாக வழங்கினர். மேனாள் மாணவர் சூர்யபிரபா நன்றி கூறினார்.