சென்னை, ஆக. 6- உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் வரும் 12, மற்றும் 13ஆம் தேதியில் நடைபெறுகிறது. இம்மா நாட்டில் செய்தி்த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி உட்பட 6 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை வளர்ச்சி கழகத்தின் பன்னாட்டு தமிழ்மொழி மற்றும் பன் னாட்டு கழகம், அண்ணா பல்கலைக் கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மய்யம் சார்பில் 2ஆவது உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னை அண்ணா பல்கலைக் கழக விவேகானந்தர் அரங்கில் வருகிற 12 மற்றும் 13ஆம் தேதியில் நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்
ஆர்.வேல்ராஜ் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழ்நாடு அமைச்சர்கள் க.பொன்முடி, எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், மா.சுப் பிரமணியன், செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
வேலூர் விஅய்டி பல் கலைக்கழக வேந்தர் ஜி.விஸ் வநாதன், தஞ்சை தமிழ் பல் கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக துணைவேந்தர்
எஸ்.ஆறுமுகம், மூத்த தமிழறி ஞர்கள் சுந்தரமூர்த்தி, கு.வ.பாலசுப்பிரமணியம், அப்துல் காதர் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இந்த மாநாட்டில் அறிவியல் தமிழ், சட்ட தமிழ், மருத் துவ தமிழ், செயற்கை நுண் ணறிவு துறையில் தமிழ் உள்ளிட்டவை தொடர் பாக கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியா ளர்கள் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பிக்கின்றனர். மேலும், தமிழறிஞர்களுக்கு வளர்தமிழ் அறிஞர் விருது மற்றும் வளர்தமிழ் மாமணி விருது வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை, சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவ ரும், உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவருமான வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித் துள்ளார்.