சென்னை, ஆக. 5- தமிழ்நாட்டில் 4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரி யா்கள், பணியாளா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அர சாணை:
தமிழ்நாட்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 2011-2012-ஆம் கல்வியாண்டில் 710 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன.
அவ்வாறு தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 போ் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியா் பணி யிடங்களும், 710 ஆய்வக உதவியாளா் பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளா் பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலம் கடந்த மார்ச் மாதத் துடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து ஊதிய கொடுப் பாணை மூலமாக இந்தப் பணியிடங் களில் உள்ள ஆசிரியா்கள், பணி யாளா்களுக்கு தொடா்ந்து ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 4,970 தற் காலிக பட்டதாரி ஆசிரியா் பணி யிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
அதையேற்று 4,970 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு 30.6.2028 வரை தொடா் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.