பா.ஜ.க. பார்ப்பனர்களுக்கானதே!

viduthalai
1 Min Read

இ.டபில்யூ.எஸ். என்பது பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு என்பதும் அதற்காக இட ஒதுக்கீட்டில் 10 விழுக்காடு ஒதுக்கப்பட்டது என்பதும் நமக்கு சொல்லித்தரப்பட்டது.

ஆனால் உண்மை என்னவென்றால் பார்ப்பனர் களுக்கானது மட்டுமே என்பது சமீபத்தில் வெளி வந்த இச்சான்றிதழ் பெற்று பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்தவர்களின் ஜாதிப்பிரிவினை வைத்துப் பார்த்தால் தெரியவரும்.
பார்ப்பனர்’களுக்கு 10% இடஒதுக்கீடு கொடுக்கும் போது இதுவரை எந்த ஒரு மசோதாவிற்கும் இல்லாத ஒரு வேகம்.
அதாவது 2019 குளிர்கால கூட்டத்தொடரின் போது ஜனவரி 7 அமைச்சரவை முடிவெடுத்தது

ஞாயிறு மலர்

நம்ம புது நாடாளுமன்றத்துல… ‘வருண பகவான்’ வந்துபோக கேப் (இடைவெளி) விட்டுக் கட்டுங்கப்பா…

ஜனவரி 8 அன்று மக்களவையில் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. ஜனவரி 9 அன்று மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடந்தது இந்த இரண்டு அவையிலும் பெரிதான விவாதங்கள் எதுவுமே நடக்கவில்லை. பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையிலும் சூறாவளி வேகத்தில் மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உட்னடியாக அன்றைய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பப்பட்டது.

அவரும் என்ன ஏது என்று கேட்காமல் ஜனவரி 12 அன்று கையெழுத்து. போட்டார்.

மறுநாள் 13.01.2019 அன்றுஅனைத்து கல்வி மற்றும் பொது நிறுவனங்களிலும் அமல்படுத்தப்பட்டது மட்டுமல்ல, அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரமாகவே வெளிவந்தது.

இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு பார்ப்பனச்சமூகத்திற்கு சான்றிதழ் கொடுப்பதற்கென்றே நாக்பூரில் ஒரு கும்பலே செயல்பட்டது. அவர்களின் மூலம் பலர் சான்றிதழ் பெற்றும் உயர் பதவிகளில் இன்று இருக்கின்றனர் என்பது தொடர்ந்து செய்திகளாகவே வெளிவந்துகொண்டிருக்கிறது.

இதிலிருந்து கடந்த 2 முறை ஆட்சியில் இருந்து தற்போதும் ஆட்சியில் உள்ள மோடி அரசும் அதன் நிதி அமைச்சரும் யாருக்காக இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்கள் என்று அறியலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *