தஞ்சை, ஜூலை 30- தஞ்சை மாநகர கழக செயலாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்செல்வன் 48ஆவது பிறந்தநாளான 27.7.2024 அன்று காலை 10.30 மணி அளவில் அவர்களது இல்லத்திற்கு சென்று தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையருக்கு பயனாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடப்பட்டது
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், திராவிடர் கழக இளைஞர் அணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார் மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துக் களை தெரிவித்தனர்.