கேரளா வயநாடு நிலச்சரிவு 60க்கும் மேற்பட்டோர் பலி – 50 பேர் படுகாயம் – 500 குடும்பங்களின் கதி என்ன?

viduthalai
2 Min Read

திருவனந்தபுரம், ஜூலை 30 கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் இன்று (30.7.2024) அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய 500 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாடு

வயநாடு சூரல்மலை மீட்புப் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பி இருக்கிறது. இந்த அணையின் நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காட்டாற்று வெள்ளம்- நிலச்சரிவு

வயநாடு சூரல்மலை பகுதியில் இடைவிடாது கொட்டிய கனமழையால் நேற்று (29.7.2024) காலை முதலே லேசான நிலச்சரிவுகள் சில இடங்களில் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான கட்டடங்களை வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஏராளமான வாகனங்கள் மழை வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இத னால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.

அதிகாலையில் 2 முறை நிலச்சரிவு

இந்த நிலையில் இன்று (30.7.2024) அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அடுத்தடுத்த நிலச்சரிவு

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு களால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் 500 வீடுகள் சிக்கி இருக்கின்றன. இந்த வீடுகளில் சிக்கிய 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணி மும்முரம்

முண்டகை பகுதியை சென்றடைவ தற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிலச் சரிவில் சிக்கியவர்களையும் படு காயமடைந்தவர்களையும் மீட்டு மருத் துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கேரளாவில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த அத்தனை பேரிடர் மீட்பு குழுக்களும் ஒட்டுமொத்தமாக சூரல் மலைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இதனால் கேர ளாவில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தற்போதைய தகவல் களின் அடிப்படையில் வயநாடு சூரல்மலை நிலச் சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். 60-க்கும் மேற் பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனும திக்கப்பட்டுள்ளனர். மேலும் 500 வீடுகளில் இருந்த 1,000 பேரை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத் தப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாட்டின் கோவை விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன.

கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

மேலும் கேரளா மாநில சுகாதாரத் துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. 8086010833, 9656938689 ஆகியவை உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து நிலை சுகாதாரப் பணியாளர்களும் ஏற்ெகனவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *