சென்னை, ஆக. 16 சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது சமூகவலைதள பக்கத் தில், ‘மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலை உயர்வு என 9 ஆண்டுகளாக இந்தியாவை பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும்,வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் அனைத்து தரப் பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதி யேற்போம்’ என தெரிவித்துள்ளார்.
சுதந்திர நாள் உரையின்போது அவர், ‘‘மக்களுக்கு நேரடி தொடர்பு கொண்ட அனைத்தும், குறிப்பாக கல்வி, மாநில பட்டியலுக்கு மாற்றப் பட வேண்டும். அப்போதுதான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற முடியும் ’’ என்றார்.