திருவாரூர், ஆக.16- திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
பகுத்தறிவு ஆசிரியர் அணியின் திருவாரூர் நகர தலைவர் மு.தமிழ்நேயன் தலைமை ஏற்று உரையாற்றினார். முன்னதாக நகர கழக செயலாளர் ப.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட ப.க. தலைவர் அரங்க ஈ.வெ.ரா, ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
மாவட்ட ஆசிரியர் அணியின் தலைவர் கோ.செந்தமிழ்ச் செல்வி கூட்டத்தின் அவசியம் பற்றியும் தலைப்புகளைச் சார்ந்து அரியதோர் உரை நிகழ்த்திட தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வம் வைக்கம் போராட்டம் 100ஆம் ஆண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100ஆம் ஆண்டு, தோள்சீலை 200ஆம் ஆண்டு ஆகிய தலைப்புகளில் வரலாற்றுச் சான்றுகளுடன் நீண்ட உரை நிகழ்த்தி கூட்டத்தில் கலகலப்பூட்டினார்.
கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் மாவட்ட கழக துணை செயலாளர் கோ.இராமலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர் சோழா.நடராஜன், இலவங்கார்குடி கணேசன், ஓவியர் சங்கர் மற்றும் ஒத்த கருத்துள்ள இயக்கத் தோழர்கள், வர்த்தகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நகர கழக தலைவர் ப.ஆறுமுகம் நன்றி கூற இரவு 10 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.