வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை பணிகள்: நடப்பு நிதியாண்டில் முடிக்கத் திட்டம்

2 Min Read

சென்னை,ஆக.16 – வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைப் பணிகளை நடப்பு நிதி யாண்டில் (2023-2024) முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே சார்பில், நாட்டின் 77ஆவது சுதந்திர தின விழா பெரம்பூர் ரயில்வே மைதா னத்தில் நேற்று (15.8.2023) கொண் டாடப்பட்டது. இந்த விழாவில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், தேசிய கொடியேற்றி, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது:

இந்திய ரயில்வேயில் வெவ் வேறு சாதனைகளில் தெற்கு ரயில்வே முக்கிய பங்களிப்பு அளிக் கிறது. 2022-2023ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.11,000 கோடியாக இருந்தது. இது, 2021-_2022ஆம் நிதியாண்டை விட 51 சதவீதம் அதிகமாகும்.

நடப்பாண்டில் முதல் 4 மாதங் களில் நீடித்த வளர்ச்சியைத் தக்க வைத்து, மொத்த வருவாய் ரூ.3,883 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 11 சதவீதம் அதி கம். ரயில்வே சரக்கு போக்குவரத்து பிரிவில், சரக்கு ஏற்றுதல் 22 சத வீதம் உயர்ந்துள்ளது. பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை 80 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வேயில் 3 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன. 

இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் பல்வேறு தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்காலத்தில் மேலும் பல வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவோம்.

2023-2024ஆம் நிதியாண்டில், காரைக்கால் -பேரளம் மற்றும் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை கடற் கரை- சென்னை எழும்பூர் ஆகிய புதிய பாதை பணிகளை முடிப் பதற்கு உறுதியாக உள்ளோம். 

இதுதவிர, சில பாதைகளில் இரட்டைப் பாதை மற்றும் அகலப் பாதை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஆர்.பி.எஃப். தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வர ராவ், ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *