நம்பிக்கையில்லா தீர்மானம்! மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல் தடுத்த பா.ஜ.க.!

1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஆக.16 – நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச  விடாமல், ஒன்றிய பாஜக அரசு தடுத்ததாக காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலை வர் கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். 

மணிப்பூரைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்  மற்றும்  நாகா மக்கள் முன்னணியின் லோர்ஹோ எஸ்.போஸ் ஆகி யோரை, நாடாளுமன்றத்தில் பேச விடாமல் பாஜக தடுத்ததாக கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். 

இதை உறுதிப்படுத்தும் வித மாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு நாகா மக்கள் முன்னணி நாடாளு மன்ற உறுப்பினர் லோர்ஹோ எஸ்.போஸ் பேட்டி அளித்துள் ளார். 

அதில், “ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத் தில் நான் பேச விரும்பினேன். ஆனால், நான் பேச வேண்டாம் என்று  பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் தனிப்பட்ட முறையில் என் னிடம் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக பாஜக இதை வலியுறுத் தியது.  

உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து நிறைய பேச இருப்பதாகவும் அத னால்,  நான் பேச வேண்டாம் என் றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தினார்கள். நான் மக்களவைத் தலைவரிடம் இதுகுறித்து எதுவும் கேட்க வில்லை. ஏனெனில், நான் இதை கோரினாலும் எனக்கு  வாய்ப்பு மறுக்கப்படும் என்று அறிந்து இருந்தேன். மணிப்பூரைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பி னரான பாஜக-வைச்  சேர்ந்த ஆர்.கே.ரஞ்சன் சிங்கிடம் இவ்விவ காரம் குறித்து நான் கேட் டேன். அவரிடமும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக் கிறது” என்று பாஜக அரசின் தில்லாலங்கடி வேலைகளை போட்டு உடைத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *