புதுடில்லி, ஆக.16- மணிப்பூரில் இன அடிப்படை யில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மத்தி யில் வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலை யில், அதிகாரிகள் யாரும் சமூக வலைத்தள குழுக்களில் இருக்கக் கூடாது என்று மணிப்பூர் மாநில பாஜக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர் பான வழக்கு உச்சநீதிமன்ற விசார ணையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் மணிப்பூரில் நிலவும் தற் போதைய நிலவரம் தொடர் பான நிலையறிக்கையை அம்மாநில பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி யன்று தாக்கல் செய்த அந்த நிலையறிக்கையில் இடம் பெற் றுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, முகநூல் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட குழுக் களில் பிரிவினை வாதம், தேச விரோதம் மற்றும் வகுப்பு வாதத்தை அதிகரிக்கும் செயல் களில் ஈடுபடுவதாகவும், இதனால், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அனைத்து சமூக வலைத்தள குழுக்களில் இருந் தும் வெளியேறவேண்டும் என்றும் உள்துறை ஆணையர் டி.ரஞ்சித் சிங் பெயரில் அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.