தமிழ்நாடு அரசின் கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டை கல்வராயன் மலையில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு

2 Min Read

கல்வராயன்மலை, ஜூலை 22- கல்வராயன் மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர் வாதம் மற்றும் வடக்கு மண்டல அய்ஜி அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டிஅய்ஜி தீஷா மிட்டல் ஆகியோர் நேற்று (21.7.2024) ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட் பட்ட கருணாபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக் குட்ப்பட்ட, மாடூர், மாதவச்சேரி, சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சேஷசமுத்திரம் ஆகிய கிராமங்களில் ஜூன் 18ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டதில் 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஅய்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்வராயன்மலை யில் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத் தில் தான் மெத்தலான் கலந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கல்வ ராயன்மலையில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிரடிப்படை காவல்துறையினர் கல்வராயன் மலையில் முகாமிட்டு தீவிர சாராய தேடல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சத்தியமங்கலம், பவானி, பண்ணாரி உள்ளிட்ட வனப்பகுதி முகாம்களில் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு சிறப்பு அதிரடி படை வீரர்கள் சுமார் 50 மேற்பட்டோர் கல்வராயன் மலைக்கு பகுதியில் முகாமிட்டு கடந்த 25 நாட்களாக ட்ரோன் கேமரா மூலம் கண் காணித்து கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் 19.7.2024 அன்று கடலூரில், 3 மாவட்ட கண் காணிப்பாளர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்திய கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல அய்ஜி அஸ்ராகார்க், விழுப்புரம் சரக டிஅய்ஜி திஷா மிட்டல் மற்றும் கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஆகியோருடன் கல்வராயன் மலைப் பகுதியில் நடைபெறும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தனர் தொடர்ந்து கச்சராபாளையம் காவல் நிலையம், கரியாலூர் காவல் நிலையங்களில் ஆய்வு மேற் கொண்டனர்.

இதனை அடுத்து நேற்று (21.7.2024) கல்வராயன்மலை அடர்ந்த வனப் பகுதிகளுக்கு சென்று கள்ளச் சாராயம் காய்ச்சப் பட்டு வரும் இடங்களை கண்டறிந்தும், கல்வராயன் மலையில் கள்ளச் சாராய வியா பாரிகள் கள்ளச் சாராயத்தை கடத்திக்கொண்டு நகரப் புறங்களுக்கு கொண்டு செல்லும் வழிகள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அதை தடுப்பதற்கான மேற்கொண்டுள்ள யுத்திகள் குறித்தும், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் நான்கு புறத்திலும் சோதனைச் சாவடிகளில் பிடிபட்ட கள்ளச் சாராய வியபாரிகள் பட்டியலையும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு அதிவிரைவு படை காவல் துறையினர் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை எழுத்தூர், மேல்பாச்சேரி, கொடமாத்தி, குரும்பலூர், கொட்டபுத்தூர், ஆராம்பூண்டி. வாரம் சிறுகாலூர் சேராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *