மருங்கூர் அகழாய்வில் சங்ககால பானை ஓடுகள்-அரிய கண்டெடுப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை20- கடலுார் மாவட்டம், மருங்கூரில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத் தப்படுகிறது.

இங்கு ஏற்கனவே ராஜராஜன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி ஆகியவை கிடைத்தன. இந்நிலையில் நேற்று 122 செ.மீ., ஆழத்தில், இரண்டு ரவுலட்டட் வகைப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் அரிக்க மேடு, வசவசமுத்திரம், பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கீழடி ஆகிய இடங்களிலும் ஆந்திரா, ஒரிசா மாநிலக் கடற்கரை ஓரங்களில் உள்ள தொல்லி யல் தளங்களிலும் இதே வகையான பானை ஓடுகள் கிடைக்கின்றன. பொதுவாக இந்த ரவுலட் டட் வகை பானை ஓடு, ரோம நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்தன.

சமீப காலத்தில் தான், தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்ட மட்கலன் கள் என நிரூபிக் கப்பட்டு உள்ளது. இவை சங்க காலம் எனும் துவக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவை. இதிலிருந்து மருங்கூர் பகுதி துவக்கவர லாற்றுக்காலத்தைச் சார்ந்த தொல்லியல் தளம் என்பது உறுதி செய்யப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *