சென்னை, ஜூலை 18- புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். புறம்போக்கு நிலத்தில் இரண்டு வகை உள்ளது.
அதாவது ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம், ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம். இதில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம் என்பது ஊரில் உள்ள கிராம நந்தம் நஞ்சை, தரிசு மற்றும் புஞ்சை போன்றவை தான்.
அதில் கிராம நந்தம் என்பது மக்கள் வசிக்கக்கூடிய மேடான பகுதி என கூறுவார்கள். இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தை நீங்கள் பயன்படுத்தி வந்தால் விண்ணப்பித்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதுவே மயானம், சாலை, காடுகள், வாய்க்கால் மற்றும் தோப்பு உள்ளிட்டவை ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களாகும். இதற்கு பட்டா வாங்க முடியாது.