டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆந்திர மாநிலத்திற்கு அதிக நிதி உதவி வேண்டும், முதலமைச்சர் சந்திரபாபு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை.
* நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்கினை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.
*தங்களை கடவுளாக சித்தரித்து திரியும் சாமியார்கள் 112 பேருக்கு கும்பமேளாவுக்கு வர தடை விதிப்போம் என அகில பாரத அகாடா பரிசத் என்ற ஹிந்து அமைப்பு எச்சரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகாராட்டிராவில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிம்ப்ரி சிஞ்ச்வாத் பிரிவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் 28 நகரசபை உறுப்பினர்கள், சரத் பவார் அணியில் சேர்ந்தனர்.
* ரூ 2 லட்சம் வரை விவசாயிகளின் கடன் தள்ளுபடி, தெலங்கானா காங்கிரஸ் அரசு அறிவிப்பு.
* உ.பி. பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாற்றம்? துணை முதலமைச்சர் மவுரியா போர்க்கொடி? டில்லியில் ஆலோசனை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘பிரதமருக்கு வீண் பேச்சில் மட்டுமே அக்கறை’: குழந்தைகளுக்கு ‘தடுப்பூசி போடாத’ மோடி அரசு மீது மல்லிகார்ஜூனா கார்கே தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை; காவல்துறை துப்பாக்கிச் சூடு ஒரு தொழிலதிபரின் உத்தரவின் பேரில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட செயல் என்று நாங்கள் நம்புகிறோம்” என வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.
தி இந்து:
* மகாராட்டிராவில் பாஜக தோல்விக்கு, அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி. அணியுடன் கூட்டு வைத்தது தான் காரணம் என ஆர்.எஸ்.எஸ். சார்பு வார இதழ் கருத்து.
தி டெலிகிராப்:
* புல்டோசர் பாபா என்று அழைக்கப்படும் உ.பி. முதலமைச்சர் யோகியை வெளியேற்ற பாஜக ஓபிசி தலைவர்கள் டில்லி பாஜக தலைமையிடம் புகார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்; வேலை வாய்ப்புகள், விலைவாசிகள், பாதுகாப்பு, ரயில்வே, நீட் மற்றும் தேர்வுத் தாள்கள் கசிவு ஆகிய பிரச்சினைகளை இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் விவாதிப்போம், ராகுல் உறுதி.
– குடந்தை கருணா