நடப்பது ‘பிராமினோகிரசி’ ஆட்சிதான்!

2 Min Read

ஒன்றிய பழங்குடி நலத்துறை ஆணையம் ஏகலவ்யா(ஏகலைவன்) மாதிரி உறைவிடப் பள்ளிகளை நாடு முழுவதும் திறந்துள்ளது.
அந்த பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலு வலகப் பணிகளுக்கு 8000 பேரை பணியமர்த்தி உள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் இந்தப்பணிகளில் அமர்த்தப்பட்டவர்களில் பழங்குடியினர் மிகக்குறைவாகவும் பெரும்பா லானோர் உயர் ஜாதியினராகவும் உள்ளனர் என்பதுதான்!
குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து இந்த 8000 பேரில் ஒருவர்கூட இல்லை என்று தெரியவந்துள்ளது. எடுத்துக்காட்டாக தென்மா நிலங்களில் தெலங்கானாவில் அதிக அளவு பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் கேரளா வருகிறது.
எடுத்துக்காட்டாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ‘‘ஏகலைவன்’’ பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிக்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவருமே அரியானாவைச் சேர்ந்தவர்கள்தான்.

பெரும்பாலும் உயர்ஜாதியினர் ஆவர். இதே அரியானாவைச் சேர்ந்தவர்கள் 2017ஆம் ஆண்டு அஞ்சல் துறை பணியாளர்களுக்கான தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்து அதில் உள்ள சில நபர்களிடம் பேசிய போது அவர்களுக்கு தமிழ் மொழி என்றால் என்னவென்றே தெரியவில்லை.
அவர்கள் அனைவரும் மோசடி செய்து தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் பணியாணை பெற்று வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிஅய் விசாரணை நடந்தது – அதன் பிறகு அந்த விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை. அன்று தமிழில் ஒரு சொல்கூடத் தெரியாமல் தமிழில் முழு மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற அரியானா நபர்கள் – வேலைக்குச் சேர்ந்து பிறகு மாற்றல் வாங்கி – அரியானா மற்றும் டில்லிக்குச் சென்றுவிட்டனர். தற்போது மீண்டும் அரியானாவைச் சேர்ந்தவர்கள் தெலங்கானாவில் உள்ள அனைத்துப் பழங்குடியினருக்காக நடத்தப்படும் ‘ஏகலைவன்’ உறைவிடப் பள்ளிகளில் வேலைக்காக சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘ஏகலைவன்’ உறைவிடப்பள்ளிகளில் பணியில் சேரும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ரூ.58 ஆயிரம் முதல் ரூ.1.42 லட்சம் வரை மாத ஊதியமாக ஒன்றிய சமூகநீதித்துறை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு உறைவிடப் பள்ளிகளாம். ஆனால் அப்பள்ளி களுக்கு ஆசிரியர்களும் அலுவலர்களும், அதிகாரிகளும், உயர் ஜாதியினர்களாம்.
உயர் ஜாதி ஏழைகள் என்று (நாள் ஒன்றுக்கு ரூ.2200 சம்பாதிப்பவர்கள்) சொல்லி 10 விழுக்காடு இடங்களைத் தூக்கிக் கொடுத்தது தானே இந்த மோடி அரசு.
எல்லாம் பார்ப்பன மயம் – அதற்குப் பெயர் பாரதீய ஜனதா அரசு!
வெள்ளைக்காரன் வெளியேறிய பிறகு இந்நாட்டில் ‘‘டெமாக்கிரசி’’ (Democracy) இருக்காது; ‘‘பிராமினோகிரசி’’ (Brahminocracy) தான் இருக்கும் என்று 1925ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் எவ்வளவுத் தொலை நோக்கோடு கூறியுள்ளார். அதுதானே இப்பொழுது நடக்கிறது!
(ஆதாரம்: ‘இந்து நூற்றாண்டு மலர்’ 15.4.1925 பக்கம் 337)
திராவிட இயக்கக் கொள்கைகள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவும் காலம் வெகு தொலைவில் இல்லை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *