பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மு.வி. சோமசுந்தரம் – சோ.வச்சலா இணையரின் 67ஆம் ஆண்டு இல்வாழ்க்கைத் துவக்க விழா மகிழ்வாக – ‘பெனிட்டோ முசோலினி – வாழ்க்கை வரலாறு,’ ‘இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச் செறிவு’ மேலும் ‘பத்து விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம்’ (ஆங்கில நூலின் மொழியாக்கம்) ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நூல்களை வெளியிட்டார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க.) ச. முரசொலி, கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா. நேரு, பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர் இரா. கவுதமன், முனைவர் மு. தவமணி, மு. செந்தமிழ்ச்செல்வன் (சைனிக் பள்ளி (பாசறை பள்ளி) மேனாள் மாணவர்) ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
‘பெனிட்டோ முசோலினி – வாழ்க்கை வரலாறு’, ‘இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச் செறிவு’ மேலும் ‘பத்து விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம்’ ஆங்கில நூலின் மொழியாக்க நூல்களை எழுதிய பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம் அவர்களின் 93ஆவது பிறந்த நாளையும், இணையர் சோ. வச்சலா ஆகியோரின் 67ஆவது இல்வாழ்க்கை துவக்க நாளையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – மோகனா வீரமணி ஆகியோர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். உடன்: அவரது குடும்பத்தினர் அல்லி ரவிசங்கர், அருண்மொழி.
தமிழர் தலைவர் சிறப்பாக பொதுத் தொண்டாற்றுவதற்கு பக்கபலமாக, உற்ற துணையாக இருக்கக்கூடிய மோகனா வீரமணி அம்மையாருக்கு சைனிக் பள்ளி (பாசறை பள்ளி) மேனாள் மாணவர்கள் சார்பாக தஞ்சை மக்களவை உறுப்பினர்
ச. முரசொலி பயனாடை அணிவித்தார். செந்தலை ந.கவுதமன் தமிழர் தலைவரிடம் நூல்களை வழங்கினார்.
கோவை கு. இராமகிருஷ்ணன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: ஆறுசாமி. நாகை. திருவள்ளுவன் தமது இயக்க தோழர்களுடன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார்.