சென்னை, ஜூலை 15- மோட்டார் வாகனச் சட்டம் 1988 படி சாலைகளில் இயங்கும் வாகனங்களுக்கு கட்டாயம் பதிவு சான்றிதழ்(RC) இருக்க வேண்டும்.இந்த சான்றிதழ் பெற்ற ஒருவர் முதல்முறையாக 15 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிப்பது அவசியமாகும்.அதன் பின்னர் அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆர்.சி.புக் புதுப்பிக்கப்பட வேண்டும்.
பரிவஹன் சேவா போர்ட்டலை க்ளிக் செய்யவும்.பின்னர் அதில் தோன்றும் மெனுவில் உள்ள “ஆன்லைன் சேவைகள்” என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் “வாகனம் தொடர்பான சேவைகள்” என்ற என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மாநிலத்தை பதிவு செய்யவும்.
அடுத்து தங்களுக்கு அருகில் இருக்கின்ற ஆர்.டி.ஓ. அலுவலகத்தை தேர்வு செய்து “Continue” என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் “சேவைகள்” என்ற மெனுவில் தோன்றும் ஆர்.சி. தொடர்பான சேவைகள்” என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் “ஆர்.சி. புதுப்பித்தல்” என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் வாகன பதிவிடவும் மற்றும் சேஸ் நம்பரை என்டர் செய்யவும். பின்னர் “Submit” என்பதை கிளிக் செய்யவும். இணையத்தில் புதுப்பிக்கத் தெரியாதவர்கள் அருகிலுள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று RC புதுப்பித்தல் படிவத்தை பூர்த்தி செய்து உரிய கட்டணம் செலுத்தி வாகன சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாகன சான்றிதழ் புதுப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: 1) பியுசி சான்றிதழ், 2) அசல் பதிவுச் சான்றிதழ், 3) ஆர்.சி. புக், 4)பான் கார்டு,
5) படிவம் 25, 6) வாகன காப்பீடு, 7) இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர், 8) புதுப்பித்த சாலை வரி சான்று, 9) முகவரி சான்றிதழ்.
மோட்டார் வாகன கட்டண விவரம்: உங்கள் வாகனத்தை புதுப்பிக்க நீங்கள் ஆர்டி.ஓ. அலுவலகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
1. செல்லாத வண்டி – ரூ.50, 2. இரு சக்கர வாகனம் – ரூ.300, 3. மூன்று சக்கர வாகனம் – ரூ.600 & ரூ.1,000, 4. கனரக வாகனம் – ரூ.1,500, 5. பிற வகை வாகனங்கள் – ரூ.3,000, ஆர்.சி.புக் புதுப்பிக்க இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும்.புதுப்பிக்கப்பட்ட வாகன சான்றிதழ் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.பின்னர் மீண்டும் வாகன சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.