சென்னை, ஜூலை 11- சிறீ சாய்ராம் கல்விக் குழுமத் தாளாளர் அரிமா லியோமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று (10.07.2024) நடைபெற்றது.
சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் கே.பழனிக்குமார் வரவேற்புரை யாற்றினார். அவரைத் தொடர்ந்து சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.இராஜா, புலத் தலைவர்கள் முனை வர் எல்.அருணாச்சலம், முனைவர் சி.ஆர்.ரெனி ராபின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இன்போசிஸ் நிறுவன அதிகாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள் ளுர் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட் டங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிப்பெற்ற முதன்மை மாணவர்கள் 100 பேருக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான லியோமுத்து உதவித்தொகை வழங்கப் பட்டது.
சாய்ராம் கல்விக்குழுமத் தலை வர் முனைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து அவர்கள், பாரத சாரண, சாரணியர் இயக்கம், Nehru Yuva Kendra Sangathan, Fit India ஆகிய முன்னெடுப்புகளை சாய்ராம் குழும கல்லூரிகளில் தொடங்கிவைத்து தலைமை உரையாற்றினார்.
அவர் பேசும் பொழுது பொருளா தாரத்தில் பின்தங்கிய, நன்கு கல்வி பயிலும் கிராமப்புற மாணவ, மாணவி களுக்கு அவர்களது படிப்பு, தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட்ட தேவையான செலவுகளையும் அரிமா. லியோமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக ஏற்றுக் கொள்வதாக அறி வித்தார். மேலும் பன்னிரண்டு கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை இந்தக் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியும், அவர்களுடைய மகிழ்ச்சியும் மிகவும் முக்கியம் என்று கருதும் இம்மாபெரும் மனிதனின் நினைவு நாளில் இன்னும் பலருக்கு பயன்படக்கூடிய சிறந்த சேவையை செய்வதில் மகிழ்ச்சி அடை கிறோம். இதுவே அரிமா லியோமுத்து அறக் கட்டளையின் நோக்கம் என்று கூறி சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் முனைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து அவர்கள் பெருமிதம் அடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு தாளாளர் லியோமுத்து அவர்களின் தன்னலமற்ற வாழ்க்கை, விடா முயற்சி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் வளர்ச்சியைப் பற்றி பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சி யின் நிறைவாக புலத்தலைவர் முனைவர் ஏ.இராஜேந்திர பிரசாத் நன்றியுரை யாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அறக் கட்டளை துணைத்தலைவர் கலைச் செல்வி லியோமுத்து, நிர்வாக இயக்குநர் எஸ்.சத்தியமூர்த்தி, அறங் காவலர்கள் சர்மிளா ராஜா, ரேவதி சாய்பிரகாஷ், மூர்த்தி, சதிஷ் குமார், முனுசாமி, மற்றும் திரு.பால சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.