திருப்பத்தூர், ஜூலை 11- திராவிடர் கழக மாணவர் கழகம் மற்றும் இளைஞ ரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி 11.07.2024 தொடங்கி 15.07.2024 வரை அய்ந்து நாட்கள் தமிழ் நாடு தழுவிய இரு சக்கர வாகன பரப்புரை பெரும் பயணத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் பங்கேற்கும் கழக தோழர்கள் கே. இராஜேந்திரன், தா. பாண்டியன் மோ. நித்தியானந்தம் ஆகியோரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் அவரது தந்தை பெரியார் இல்லத்தில் 10.07.2024 அன்று காலை 9. 00 மணியளவில் நடைபெற்றது.
சமூக நீதி காக்கும் இந்த சரித்திர பயணத்தில் பங்கேற்கும் கழக தோழர் களை மாநில மகளிரணி பொருளாளர் எ. அகிலா, பெரியார் பெருந் தொண்டர் கமலம்மாள், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், அ.உலகன் மாவட்ட தலைவர் மாணவர் கழகம், தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ப.க., காளிதாஸ் நகர தலைவர், ஏ.டி.ஜி.சித்தார்த்தன் நகர செயலாளர், வ.புரட்சி மாவட்ட துணைத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், தே.பழனிசாமி, மாவட்ட செயலாளர் இளைஞரணி, ம.சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப.அஜித் மாவட்ட துணைச்செயலாளர்இளைஞரணி, கே.ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், தா.பாண்டியன், சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர், ப.நாத்திகன் மாவட்ட துணைச் செயலாளர், இரா.கற்பகவள்ளி, மாவட்ட தலைவர் மகளிர் பாசரை, சி.சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி.நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ.திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியரணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப.ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன், மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, எம். ஞானபிரகாசம் மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம், குமரவேல் மாவட்டச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், பெருமாள்சாமி மாவட்ட துணைச்செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், ஆ. ப. செல்வராஜ் மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், சிவக்குமார் நகரதலைவர் சோலையார்பேட்டை, J.M.P.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, லட்சுமணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு.வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே.வெங்கடேசன்மாதனூர் ஒன்றிய செயலாளர், வே.அன்பு மாவட்ட செயலாளர் ப.க, எம்.என்.அன்பழகன் மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், நா.சுப்புலட்சுமி மாவட்ட ப. க. எழுத்தாளர் மன்றம், எஸ். சுரேஷ் குமார் மாவட்ட தலைவர் இளைஞரணி, ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜசேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், கோ. சங்கர் சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி. சந்தோஷ் குமார் காக்கங்கரை ஒன்றிய பொறுப்பாளர் ஆகியோர் தோழர்கள் பாதுகாப்பாகவும் நலமுடனும் சென்று வெற்றியுடன் திரும்பி வருமாறு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.