பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூலை 9- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்திறன், வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் சென்னை யில் இன்று முதல் ஒரு வாரம் நடை பெறும் என மாவட்ட ஆட் சியர் தெரிவித்துள்ளார்.

இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, தொழில்திறன், போட்டித் தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் ஜூலை மாதம் 2ஆம் வாரம் (9 முதல் 12ஆம் தேதி வரை) தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாகவும், 15ஆம் தேதி உலக இளைஞர் திறன் நாளும் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம் மூலம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மாற்றுத்திறனாளி களுக்கான தொழில்நெறி விழிப் புணர்வு மற்றும் திறன் வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 10ஆம் தேதி மகளிர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பெண் கல்வி, பெண் முன்னேற்றத்துக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகின்றன.

தொடர்ந்து பொறியியல் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்கு தொழில்நெறிவழி காட்டும் நிகழ்ச்சி களும், 15ஆம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான சுயவேலைவாய்ப்பு, தொழிற் பழகுநர் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

இத்துடன் வேலை வாய்ப்பு முகாம், கல்வித் தொலைக்காட்சி பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *