பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளிப்பதே உண்மையான நீதி: உச்சநீதிமன்றம்

2 Min Read

புதுடில்லி, ஆக. 21- உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறை நிகழ்வில் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று போக்சோ வழக்கு விசாரணையில் எதிர் கொண்ட துயரங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி கள் ரவீந்திர பட், அர விந்த் குமார் அமர்வு விசாரித்தது. அப்போது போக்சோ சட்டத்தின் வழிமுறைகளில் ஒன் றான ‘உதவும் நபர்’ நியமனம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை நீதி பதிகள் வழங்கினர். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் பல் வேறு கருத்துகளை வெளியிட்டனர். இது தொடர் பாக அவர்கள் கூறியதாவது:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், தொடக்கத்தில் ஏற்படும் திகில் மற்றும் அதிர்ச்சி யுடன், அது ஆழமான வடுவையும் ஏற்படுத்துகி றது. அது மட்டுமின்றி, அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு மற்றும் உதவிகள் இல்லாததால் நிலைமை மோசமாகிறது. இது போன்ற நிகழ்வுகளில், குற்றவாளியைப் பிடித்து அவரை நீதிக்கு முன் கொண்டு வருவதன் மூலமோ அல்லது தண்டனையின் தீவிரத்தினால் மட்டுமோ நிவாரணம் கிடைப்பதில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்க ளுக்கு (குழந்தை) அல்லது பாதிக்கப்படக்கூடிய சாட்சிக்கு ஆதரவு, கவ னிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவை வழங்குவதே உண்மையான நீதியாகும். மேலும் முழுமையான விசாரணையும், விசாரணையின் போது முடிந்த வரை வலியற்ற, குறை வான சோதனை அனுபவத்தை உறுதி செய்வதி லும் அரசும், அதிகாரிக ளும் கவனம் செலுத்த வேண்டும்.

வழக்கு விசாரணை காலத்தில் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப் பும், ஆதரவும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப் பட்டவர்கள் சமூகத்திற்கு திரும்பக் கொண்டுவரப் பட்டு, பாதுகாப்பை உணரச்செய்து, அவர்க ளின் மதிப்பும், கண்ணிய மும் மீட்டெடுக்கப் படும்போதுதான் ஓரள வேனும் நீதி கிடைக்கும். இவை இல்லாத நீதி என்பது ஒரு வெற்று சொற்றொடர் மற்றும் ஒரு போலி செயல்பாடு கள்தான். இது தொடர் பாக போக்சோ சட்ட விதிகள் ஒரு பயனுள்ள கட்டமைப்பை வழங்குகி றது. இதை அமல்படுத்து வது மாநில அரசின் மிகப் பெரிய கடமையாகும்என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த விவ காரத்தில் உத்தரப்பிர தேச மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளர் 6 வாரங்களுக்குள் ஆலோ சனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உதவும் நபர் நிய மனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி கள் அறிவுறுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *