திருப்பத்தூர், ஜூலை 6 – திராவிடர் கழக மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி 11.07.2024 தொடங்கி 15.07.2024 வரை 5 நாட்கள் தமிழ்நாடு தழுவியஇரு சக்கர வாகன பரப்புரை பெரும் பயணம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையில் தந்தை பெரியார் இல்லத்தில் 06.07.2024 அன்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் வரவேற்றார். இக் கூட்டத்தின் நோக்கம் செயல் பாடுகள் குறித்து மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி. எ. சிற்றரசன் விளக்கினார்.
இக் கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சோலையார் ஒன்றிய தலைவர் கே. இராஜேந்திரன் மற்றும் சோலையார் பேட்டை ஒன்றிய செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் பெரியார் திடலில் இருந்து பயணக் குழுவில் இடம் பெறுவார்கள் என்றும், மேலும் பயணித்தில் பல தோழர்கள் தங்களை இணைத்துக் கொண்டு பயணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இப் பயணக் குழு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நாள் 13.07.2024 அன்று ஆம்பூரில் மாதனூர் ஒன்றிய தலைவர் வெற்றி, மாதனூர் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சிறப்பாக வரவேற்று நீட் தேர்வு விளக்கக் கூட்டம் நடத்துவது, அதே நாளில் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி பகுதியில் வாணியம்பாடி நகர தலைவர் அன்புச்சேரன் மற்றும் கிரிசமுத்திரம் ஒன்றிய தலைவர் இராஜசேகர் ஆகியோர் தலைமையில் வரவேற்பது என்றும், 14.07.2024 அன்று வருகைதரும் குழுவை விசமங்களத்தில் வரவேற்று அன்று மதியம் திருப்பத்தூர் நகரில் விளக்க பொதுக் கூட்டம் நடத்துவது. தோழர்களுக்கு திருப்பத்தூர் நகரில் மதிய உணவை ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்குழு வருகையின் போது திருப்பத்தூர் நகர் முழுவதும் கழக கொடி, குறைந்தது 100 வாகனங்களில் வரவேற்பது, விளம்பர பதாகை வைப்பது என்று தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில மகளிரனி பொருளாளர் எ. அகிலா ஆகியோர் தங்கள் உரையில், வாழ்க்கையில் பயணங்கள் பல உள்ளன ஆன்மீக பயணம், இன்ப சுற்றுலா பயணம், உணவு பயணம், கேளிக்கை பயணம் என்று பல பயணங்கள் உள்ளன. இவையெல்லாம் தனி மனிதனின் மகிழ்ச்சிக்காக செல்பவை.
ஆனால், நீட் தேர்வு பயணம் என்பது எல்லா நோக்கங்கள் விட உயர்ந்த நோக்கம் சமூக நோக்கம். இந்த சமூகம் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் இலட்சியத்தை முன்னெடுத்து செல்லும் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் இலட்சிய பயணம். தன் நலன் இல்லாமல் பொது நலனுக்காக நடைபெறும் இலட்சிய பயணித்தில் தங்களை இணைத்துக் கொண்டு வரலாற்றில் தங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். பயண அனுபவமே நம் எதிர்காலத்தை வழி நடத்தி செல்லும் என்று சிறப்புரையாற்றினார்கள்.
கலந்துரையாடல் கூட்டத்தில்
பங்கேற்ற தோழர்கள்
அ. உலகன், மாவட்ட தலைவர் மாணவர் கழகம், தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி. தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் ப.க., ஏ.டி.ஜி.சித்தார்த்தன் நகர செயலாளர், வ.புரட்சி மாவட்ட துணைத் தலைவர், விடுதலை வாசகர் வட்டம், பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், தே. பழனிசாமி மாவட்ட செயலாளர் இளைஞரணி, ம. சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப.அஜித் மாவட்ட துணை செயலாளர், இளைஞரணி, கே.ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், தா. பாண்டியன் சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர்,ப. நாத்திகன் மாவட்ட துணைச் செயலாளர், இரா. கற்பகவள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி. சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ. திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியரணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப. ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, எம். ஞானபிரகாசம் மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம், குமரவேல் மாவட்டச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், பெருமாள்சாமி மாவட்ட துணைச்செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், ஆ.ப.செல்வராஜ் மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், சிவக்குமார் நகரதலைவர் சோலையார்பேட்டை, ஜே.எம்.பி.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, லட்சுமணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு. வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே. வெங்கடேசன்மாதனூர் ஒன்றிய செயலாளர், வே. அன்பு மாவட்ட செயலாளர் ப.க., எம்.என். அன்பழகன் மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், நா. சுப்புலட்சுமி மாவட்ட ப. க. எழுத்தாளர் மன்றம், எஸ்.சுரேஷ் குமார் மாவட்ட தலைவர் இளை ஞரணி, ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜசேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், கோ. சங்கர் சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி. சந்தோஷ் குமார் காக்கங்கரை ஒன்றிய பொறுப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
நகர தலைவர் காளிதாஸ் நன்றி தெரிவித்தார்.