சிவில் சர்வீஸ் : முதல் நிலை தேர்வு 14,626 பட்டதாரிகள் தேர்ச்சி தமிழ்நாட்டில் 650 பேர் தேர்வு

1 Min Read

சென்னை, ஜூலை 2- சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம் நாட்டில் அய்ஏஎஸ், அய்பிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங் களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலைத் தேர்வெழுத 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். இந் நிலையில் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 79 நகரங்களில் கடந்த ஜூன் 16ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை சுமார் 6 லட்சம் பேர் வரை எழுதியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் சென்னை உட்பட 5 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வை 25 ஆயிரம் பேர் வரை எழுதியதாக தெரிகிறது.

இந்நிலையில் முதல்நிலை தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டது. அதன் விவரங்களை தேர்வர்கள் www.upsc.gov.in, www.upsconline.nic.inல் சென்று அறிந்து கொள்ளலாம். முதல்நிலை தேர்வில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 650 மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். கடந் தாண்டு தமிழ்நாட்டில் சுமார் 700 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். செப். 26-ல் முதன்மை தேர்வு இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு செப். 20-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் 16 நாட்களில் வெளியிடப்பட்டது. இந்தாண்டு 14 நாட்களிலேயே முடிவுகள் வெளியாகி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *