புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 1- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு 29.6.2024 அன்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு பேருந்து முனையம், ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள், கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம் புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

கோவை- பொள்ளாச்சி, திருப் பூர்- நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும். கோவை மாநக ராட்சியை விபத்தில்லாத மாநக ராட்சியாக மாற்ற ரூ.5 கோடி செலவில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5 கோடியே 21 லட்சத்தில் புதிய ஆய்வுப் பிரிவு உருவாக்கப்படும். ஏரல், கருத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் நிறுவப்படும். சமயபுரம், மேட வாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீ்ட்புப் பணி நிலையங்கள் அமைக்கப்படும்.
பேரணாம்பட்டு காவல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் உள்ளிட்ட 100 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *