பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூலிகை மருந்தியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

2 Min Read

அரசியல்

திருச்சி, ஆக. 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூலிகை மருந்தியல் துறை சார்பில்“Deciphering the Avenues of Intellectual Property Rights and Pharmacovigilance”என்ற தலைப்பி லான ஒருநாள் கருத்தரங்கம் 22.8.2023 அன்று நடைபெற்றது. 

இதன் துவக்க விழா காலை 9.30 மணியளரில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை  வரவேற்புரையாற்றி னார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் முனைவர் அ. மு. இஸ்மாயில்  வாழ்த்துரை வழங் கினார். துவக்க விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான புதுச்சேரி, அன்னை தெரசா முதுநிலை பட் டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்விசார் பதிவா ளரும், மருந்தியல் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் முனைவர் வி. கோபால் நலவாழ் வுத் துறையில் மூலிகை மருந்து களின் பயன்பாடு குறித்தும், நம் நாட்டில் தொடர்ந்து நடை பெறும் ஆராய்ச்சிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். துவக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் எஸ். ஷகிலா பானு  நன்றியுரையாற்றினார். 

அதனைத் தொடர்ந்து, முதல் அமர்வாக மூலிகை மருந் துகளின் அறிவுசார் சொத்துரிமை குறித்து முனைவர் வி.கோபால்  மாணவர்களுக்கு விளக்கினார். காசியாபாத் (உத்தரப்பிரதேசம்), இந்திய அரசின் மக்கள் நல் வாழ்வுத் துறையின்  Indian Pharmacopoeia Commission முது நிலை ஆராய்ச்சி அலுவலர் முனைவர் வி. கலைச்செல்வன்  இந்திய மருந்தியல் நிறுவனங் களில் மேற்கொள்ளப்படும் அறி வுசார் சொத்துரிமைகள் குறித்து இணைய வழி வாயிலாக தமது இரண்டாம் அமர்வில் விளக்கினார். 

மொஹாலி (பஞ்சாப்) தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NIPER) அறிவுசார் சொத்துரி மைத் துறைரின் தொழில்நுட்ப விஞ்ஞானி முனைவர் சந்தன் சந்தா  மருந்தியல் துறையில் அறிவுசார் சொத்துரிமைகளை பதிவு செய்யும் முறைகள் குறித்து இணைய வழி வாயிலாக தமது மூன்றாம் அமர்வில் விளக்கினார். திருச்சி கே.எஸ். வாரியார்ஸ் அஷ்டங்கா ஆயுர்வேதிக் பிரை வேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டி.ஆர். சசிவாரியார்  மூலிகை மருந்துகள் தயாரிப்பு குறித்து நான்காம் அமர்வில் விளக்கினார். 

அதனைத் தொடர்ந்து மாலை  4.45 மணியளவில் நிறைவு விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தி யல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை  தலை மையில் மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் வி. கவிதா  வரவேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் முன்னிலை வகித்தார். 

நிறைவு விழா சிறப்பு விருந் தினர் டி.ஆர். சசிவாரியார்  மூலிகை மருந்துகளின் தேவை மற்றும் தொழில்நுட்ப வசதிக ளுக்கேற்ப அதன் தயாரிப்பு முறைகள்குறித்து உரையாற்றி கருத்தரங்கில் பங்குகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாண வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். 

இணையம் மற்றும் நேரடி யாக நடைபெற்ற இக்கருத்தரங் கில் துபாய், சவுதி, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ்நாடு, கருநாடகா, மகா ராட்டிரா, கேரளா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட மருந்தியல் நிறுவனங்களைச் சார்ந்த 221 மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி யாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்விற்கு இறுதி யாக, மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் எம். சாந்தா  நன்றி யுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *