பாபநாசம், ஆக. 25- கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் நகர திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளையின் மேலாண் மைக்கு உட்பட்ட பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவியல் மன்ற தொடக்க விழா நிகழ்ச்சி 21.08.2023 அன்று மதியம் 2 மணி அளவில் நடை பெற்றது.
பள்ளியின் அறிவியல் துறைத் தலைவர் எ.ஸ்டீபன் ஞானசேகர் வரவேற்புரை ஆற்றினார். பள் ளியின் செயலாளர் ப.செல்வ ராசு தலைமை வகித்தார்.
தலைமைச் செயலாளர்
க. கலியமூர்த்தி, நிர்வாக செயலா ளர் ஏ. கைலாசம், நிதிச் செயலா ளர் வி.பொம்மி, அறங்காவ லர்கள் திருஞானசம்பந்தம், கு.ப. ஜெயராமன், தங்க.பூவானந்தம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோவி.ராஜீவ் காந்தி, அறங்காவலர் சா.வரத ராசன், ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலையேற்றனர்.
பள்ளியின் முதல்வர் சே. தீபக், துணை முதல்வர் ஜெ.சித்ரா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தணிக்கையாளர் சு.சண்முகம்,மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் பேராசிரியர் ம.சேதுராமன், ஆகியோர் உரைக்கு பின் திரா விடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குரு சாமி, மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையின்போது மாணவர் களிடையே அறிவியல் மனப் பான்மையை வளர்க்கும் கேள்வி களை கேட்டார். ஒரு மனித னுக்கு அழகு என்பது எது என்று வினவிய போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் “மானமும் அறிவும் தான் மனி தனுக்கு அழகு” என்று விடை யளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அந்த மாணவர்க ளுக்கு நூல்கள் வழங்கி பாராட் டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து “அறிவியல் மனப்பான்மை வளர்ப் போம்..! அறியாமை அகற்று வோம்..!” என்னும் தலைப்பினில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றி னார். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி வளா
கத்தில் சிறப்பு விருந் தினர்கள் வருகையின் நினை வாக மரச்செடிகள் பொதுச் செயலாளர் அவர்களால் நடப் பட்டது. முதுகலை ஆசிரியர் ப.கிருஷ்ணவேணி நன்றி உரை யாற்றினார்.