*வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைக்க நெய்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (25.6.2024) * முப்பதாம் ஆண்டு திருமண நாளையொட்டி ரத்னசபாபதி – வனிதா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். * விஜயலட்சுமி பாவேந்தன் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று குணமடைந்து தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவரது உடல் நலம்பற்றி தமிழர் தலைவர் விசாரித்தார். (நெய்வேலி – 26.6.2024)
விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம் இளங்கோவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (25.6.2024)
Leave a Comment