புதுநகர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்தி பூரண குணமடைய வேண்டி கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட காவல்துறையினர் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடந்ததாம். கடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர் கதிரவன், ருத்திராம்பாள், கவியரசன், சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், ஏட்டு அருள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டார்களாம்.