சென்னை, ஜூன் 26- வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித் துள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
பெருநகர சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில்” சுமார் 89 லட்சம் பொதுமக்களுக்கு குடிநீர், பூண்டி, சோழவரம். புழல் கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், நீண்டகால குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 10 கோடிலிட்டர்திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் நெம்மேலியில் நாள்தோறும் 11 கோடி லிட்டர் மற்றும் கூடுதலாக நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் ஆகிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
வீராணம் ஏரி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிநீர்வரத்து இல்லாத நிலையில், குடிநீர் வினியோகிக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக, சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், வீராணம் ஏரியைச் சுற்றியுள்ள இதர நீராதாரங்களான நெய்வேலி சுரங்கம். ஆழ்துளைக் கிணறுகள், பரவனாறு ஆகியவற்றிலிருந்து நாளொன்றுக்கு 7 கோடி லிட் டர் குடிநீர் எடுக்கப்பட்டு, நெம்மேலியில் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் நீர் எடுக்கப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் (மண்டலம் – 8), தேனாம்பேட்டை (மண்டலம் – 9), கோடம்பாக்கம் (மண்டலம்- 10), வளசரவாக்கம் (மண்டலம்-11), ஆலந்தூர் (மண்டலம் – 12) மற்றும் அடையாறு (மண்டலம்-13) ஆகிய பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
குடிநீர் வினியோகம்
தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. வீரா ணம் ஏரியிலிருந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு நீர் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் (180 மில்லியன் லிட்டர்) நீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவல் சென்னை குடிநீர் வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.